(ஆர். விதுஷா றோஜனா)

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களுடன் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை ஹொரணை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த சந்தேக நபர் ஹெரோணை பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட சோதனையின் போதே அவரிடமிருந்து ஒரு தொகை தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை கைதுசெய்த பொலிஸார் சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.