மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 45ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து  அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 62 மனித எலும்புக்கூடுகள் கண் பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகற்றும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.