(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதாரத்தை  தொடர்ந்தும் வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும்  மாபியா குழுவாகவே  இன்று  அரச வைத்திய சங்கத்தினர் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய சங்கத்தினர் நாடுதழுவிய ரீதியில் நாளைமறுதினம்  மேற்கொள்ளவுள்ள  பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடு சர்வதேச ரீதியில் முன்னேற வேண்டுமாயின்  மாறிவரும் தொழினுட்பங்களை எற்றுக் கொள்ள வேண்டும்  எதிர்தரப்பினும்  அரச வைத்திய சங்கத்தினரும் குறிப்பிடுவது போன்று  சிங்கப்பூர் சுதந்திர வர்த்தகத்தில் எவ்வித சூழ்ச்சிகளும்  இடம்பெறவில்லை.      

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும். ஒரு தரப்பின் சில அரசியல் நோக்கங்களுக்காக  அரசாங்கம்  தீர்மானித்த விடயங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. 

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை  தொடர்ந்து வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும்  மாபியா குழுவாகவே  இன்று  அரச வைத்திய சங்கத்தினர் செயற்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.