தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்த இளைஞன்

Published By: Digital Desk 4

01 Aug, 2018 | 02:58 PM
image

டெல்லியை சேர்ந்த ஒரு இளைஞன் தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய காணொளியை பார்த்த 2300 பேரில் ஒருவர் கூட குறித்த இளைஞனை காப்பற்ற முன்வராதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் டெல்லி புறநகர் பகுதியில் உள்ள குருகிராம் நகரில் வசித்தவர் அமித்சவுகான். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன, 27 வயதான அமித்சவுகானுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது.

அமித்சவுகான் கடுமையாக திட்டியதால் அவரது மனைவி கடும் கோபம் அடைந்ததோடு. தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

மனைவியின் செயற்பாடு அமித்சவுகானுக்கு மிகுந்த விரக்தியை கொடுத்தது. அன்று இரவு 7 மணி அளவில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் தீர்மானித்தார். அதற்கேற்ப புகைப்படக் கருவியை அவர் சரியான கோணத்தில் வைத்ததன் பிறகு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமித்சவுகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்தததை பேஸ்புக்கில் சுமார் 2000 பேர் நேரிடையாக பார்த்தனர். ஆனால் ஒருவர்கூட அவரது தற்கொலையை தடுத்து நிறுத்த முயற்சி செய்யவில்லை.

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பை பார்த்தவர்கள் பொலிஸாருக்கோ அல்லது குறித்த இளைஞனின் உறவினர்களுக்கோ தகவல் தெரிவித்திருந்தால் இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47