கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கைதியொருவருக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட ஒருவரை வாழைத்தோட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பெலியகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரிடமிருந்து 10 மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.