கிளிநொச்சி முரசுமோட்டை புனித அந்தோனியார் றோ.க வித்தியாலயத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டம் இன்று )பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முரசுமோட்டை புனித அந்தோனியார் றோ.க.வித்தியாலயத்தின் குடிநீர் தேவை  தொடர்பில்; முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மானிகக்ப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, பங்குத்தந்தை,  கரைச்சிப்பிரதேச சபையின் உறுப்பினர்களான சத்தியானந்தன் மற்றும் நந்தகுமார் கோட்டைக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் மற்றும்  பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்; பழைய மாணவர்கள் மாணவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.