‘துருவங்கள் பதினாறு’ என்ற வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் நரகாசூரன் என்ற படம் இம்மாத இறுதியில் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவிக்கும் போது,

‘ துருவங்கள் பதினாறு என்ற எம்முடைய முதல் படத்தைப் போல் இதுவும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். 

இதில் அரவிந்தசாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா, இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணியளவில் இணையத்தில் வெளியாகிறது. திரைப்படம் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று வெளியாகும். கௌதம் வாசுதேவ் மற்றும் எமக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதால் அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.’ என்றார்.