இரு கருப்­பை­களைக் கொண்ட பெண்­ணொ­ருவர் ஒரே சம­யத்தில் அந்த இரு கருப்­பை­க­ளிலும் கருத்­த­ரித்து இரு குழந்­தை­களைப் பிர­ச­வித்த அதி­சய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு பெண்­ணொ­ருவர் இரு கருப்­பை­க­ளிலும் ஒரே சம­யத்தில் கருத்­த­ரித்து குழந்­தை­க­ளைப் பிர­ச­விப்­பது 500 மில்­லி­ய­னுக்கு ஒரு பிர­சவம் என்ற ரீதியில் இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும்.கோர்வோல் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜெனிவர் அஷ்வூட் (31 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு கருத்­த­ரித்து ஒரே சம­யத்தில் குழந்­தை­களைப் பிர­ச­வித்­துள்ளார்.

அவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கருத்­த­ரித்­தி­ருப்­பதை அறிந்து மருத்­துவ பரி­சோ­த­னைக்குச் சென்றபோது அவ­ருக்கு இரு கருப்­பைகள் இருப்­ப­தையும் அந்தக் கருப்­பைகள் ஒவ்­வொன்­றிலும் தலா ஒரு குழந்தை வீதம் இரு குழந்­தை­களை அவர் கருத்­த­ரித்­தி­ருப்­ப­தையும் கண்­ட­றிந்து மருத்­து­வர்கள் திகைப்­ப­டைந்­தனர்.

ஜெனி­வ­ருக்கு ஏற்­க­னவே 8 வயதில் மில்லி என்ற மகள் உள்ளார். ஆனால் அவர் மில்­லியை தனக்கு இரு கருப்­பைகள் இருப்­பதை அறி­யாத நிலை­யி­லேயே கருத்­த­ரித்து பிர­ச­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜெனிவர் தற்­போது இரு கருப்­பை­க­ளிலும் கருத்­த­ரித்து ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்­றையும் பெண் குழந்­தை­யொன்­றையும் அறுவைச் சிகிச்சை மூலம் பிர­ச­வித்­துள்ளார்.

ஆண் குழந்­தைக்கு பிறையன் எனவும் பெண் குழந்­தைக்கு பொப்பி எனவும் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.