(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணைத்தலைவர் பதவி அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு வழங்கப்பட்டமையினூடாக நாட்டின் சுகாதார சேவையை பலப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பணிகள் சர்வதேசத்தின் பாராட்டினைப் பெற்றிருப்பது மேலும் உறுதியளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற ' சுவபதி அபிசேக்கய" வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

2018 ஜனவரி 08 ஆம் திகதியின் பின்னரே நாட்டில் இலவச சுகாதார சேவை உண்மையிலேயே சுதந்திரமாக செயற்படுகின்றது. சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் தீர்மானங்களின்போது மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பொறுப்புக் கூறவேண்டிய நிலை தற்போது இல்லை. அத்துடன் சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்படும் சட்ட ஏற்பாடுகளும் சட்ட மூலங்களும் தற்போது திணைக்களத்தில் காணாமற் போவதுமில்லை என்றார்.