மாநகர சபை அலுவலகத்தைத் திறக்க விடாமல் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

Published By: Daya

01 Aug, 2018 | 12:39 PM
image

புதிதாக 10 பேருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கியமையினை எதிர்த்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இன்று கல்முனை மாநகர சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர சபை அலுவலகத்தை திறக்க விடாமலும் தடுத்து வைத்திருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையிலான  ஊழியர்கள் 102 பேர் இருக்கும் நிலையில் நிரந்தரமாக்காமல் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதாலேயே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தாம் நடத்தியதாக தெரிவித்தனர்.

 'கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சின் செயலாளரே 6,7 வருடங்களாக சிற்றூழியர்களாக பணிபுரிந்து வருகிறோம் எங்களைப் புறக்கணித்து புதிதாக வருபவர்களுக்கு நியமனம் வழங்காதே"

'அரசியல்வாதிகளின் நாடக நியமனத்தை நிறுத்தி எங்களுக்கு நியமனத்தை வழங்கு"

'கிழக்கு மாகாண ஆளுநரே மாநகர சபையின் நிரந்தரமற்ற ஊழியர்களின் ஜீவனோபாய நடவடிக்கைளில் கை வைக்காதே"

'எஸ்.ஓ.ஆர். சட்டத்தை மீறிய ஆட்சேர்ப்பை உடன் நிறுத்து"

'நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்யும் என நினைத்தோம் ஆனால் எங்களை நடு வீதியில் கொண்டு வந்து விட்டது"

போன்ற வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர சபை அலுவலகத்தை திறக்க விடாமல் தடுத்தனர் இதனால் மாநகர சபை அலுவலகம் திறக்கப்படவில்லை கடமைக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே நின்றனர்.

இதேவளை கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகள் சீராக இடம்பெறவில்லை இதன் காரணமாக பல பிரதேசங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் வீதியோரங்களில் தேங்கிக் கிடப்பதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.

தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை மாநகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாமுவேல் சந்திரசேகரம் பொன். செல்வநாயகம் எஸ். குபேரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29