இந்தியாவின், பீகார் மாநிலத்தில் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறொன்றில் மூன்று வயது பெண் குழந்தையென்று  தவறி விழுந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

குழந்தை மீட்க்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப்பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் 110 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசன் செலுத்தப்பட்டும் வருகின்றது. மேலும் குழந்தையின் நடத்தைகளை  சீ.சீ.டி.வி. கமராக்களை கொண்டு அவதானிப்பதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.