யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் பற்றைக்குள் கைவிடப்பட்டிருந்த இரு துவிச்சக்கர வண்டிகளை நேற்று நள்ளிரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி செருக்கல் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பற்றைக்காணிக்குள் ஆண் ஒருவருடையதும், பெண் ஒருவருடையதும் துவிச்சக்கர வண்டிகள் இரு நாட்களாக அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர். இரு துவிச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.