அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து மர்ம அச்சுறுத்தல் காரணமாக  மாணவர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத அச்சுறுத்தலை தொடர்ந்து தீடிரென பாடசாலையை சுற்றிவளைத்த பெருமளவு காவல்துறையினர் அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியுள்ளனர்.

மேலும் பெற்றோர்களை பாடசாலையிலிருந்து விலகியிருக்குமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

காலை 9 மணிக்கு ஆஸ்டேல் உயர்தரப் பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினரே மாணவர்களை அகற்றியுள்ளனர்.

மாணவர்கள் வெளியேற்றப்படுவதால் வாகனசாரதிகளை அப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த நடவடிக்கைகக்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் இன்னமும் அறிவிக்கவில்லை.

இதேவேளை பாடசாலை பாதுகாப்பாக உள்ளது என காவல்துறையினர்  உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.