எகிப்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹஸ்ம் கிளர்ச்சி குழுவைச் சேர்ந்த ஐவர் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி உயிரிழந்துள்ளனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள கல்யூபியா மாகாணத்தில் எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதல் காரணாக மேற்படி 5 கிளர்ச்சியாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த இவர்கள் ஹஸ்ம் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், கெய்ரோவிற்கு அருகில் உள்ள எல் மார்க் எனும் இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.