வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஈடுபடும் பிரதான நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்கள் மீதே பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.