இலங்கை, மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களின் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.