அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையை தாக்கி அழிக்கப் போவ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வியா­ழக்­கி­ழமை தம்மால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய காணொளி காட்­சி­யொன்றில் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் தம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் தொடர்ச்­சி­யாக அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் ஒன்றை நடத்­த­வுள்­ள­தாக அச்­சு­றுத்தல் விடுத்து மேற்­படி தீவி­ர­வா­தி­களால் காணொளிக் காட்­சி­யொன்று வெளி­யி டப்பட்ட­மைக்கு ஒரு நாள் கழித்து மேற்­படி புதிய காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.


அந்தக் காணொளிக் காட்­சியில் தீவி­ர­வா­திகள் வழ­மை­யாக அணியும் ஆடை­க­ளை­யொத்த ஆடையை அணிந்து நீண்ட தாடி­யுடன் தோன்­றிய ஜிஹாதி, “நாம் பாரிஸில் எமது தாக்­கு­தல்களை ஆரம்­பித்­துள்ளோம். அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் அவற்றை நாங்கள் பூர்த்தி செய்­ய­வுள்ளோம்" என எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.
“இறை­வனின் விருப்­பத்தின் பிர­காரம் நாங்கள் வெள்ளை மாளி­கையை எமது தீயால் கறுப்­பாக்­குவோம்" என அவர் அந்தக் காணொளிக் காட்­சி யில் சூளு­ரைத்­துள்ளார்.
மேற்­படி காணொளிக் காட்சி ஈராக்­கியத் தலை­நகர் பக்­தாத்தின் வடக்கே ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள திஜ்லாஹ் மாகா­ணத்தில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய கிழக்கு ஆராய்ச்சி நிறு­வகம் தெரி­விக்­கி­றது.


இந்தக் காணொளிக் காட்­சியில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் மற்றும் ஆட்­சேர்ப்பு பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் அல் காயத் ஊடக நிலை­யத்தின் கறுப்புக் கொடிச் சின்னம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.


அந்தக் காணொளிக் காட்­சியில் வீதி­யொன்றில் நின்­ற­வாறு உரை­யாற்றும் பிறி­தொரு தீவி­ர­வாதி, ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை மேற்­கொள்ளும் பிரான்ஸ் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை நடத்­த­வுள்­ள­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

அந்தத் தீவி­ர­வாதி கட­வுளைக் குறிக்கும் வகையில் வானை நோக்கி கையைக் காண்­பித்து, இந்தத் தாக்­கு­தல்கள் மூலம் எதனை அவர்கள் (ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் எதி­ரிகள்) எம்­மி­ட­மி­ருந்து எதிர்­பார்க்க முடியும்? “ என வின­வினார்.


"நாம் மேலும் தாக்­கு­தல்­களை நடத்­து­வதன் மூலம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுக்கும் அவ­ரது மக்­க­ளுக்கும் போலவே பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்ட்­டுக்கும் அவ­ரது மக்­க­ளுக்கும் செய்­தி­யொன்றைக் முன்­வைக்­கிறோம்' என்று தெரி­வித்த அந்த தீவி­ர­வாதி, "நாம் (வெடி­பொ­ருட்­களைக் கொண்ட) பட்­டிகள் மற்றும் கார் குண்­டுகள் என்­ப­வற்றின் மூலம் அவர்­களை வாட்­ட­வுள்ளோம்" என்று கூறினார்.


“ அவர்கள் எங்கு சென்­றாலும் நாம் அவர்­களைத் தொடர்வோம். நாம் அவர்­களை அடி­மைகள் போன்றும் நாய்கள் போன்றும் மாற்­றுவோம்' என அந்தத் தீவி­ர­வாதி மேலும் தெரி­வித்தார்.


மேலும் அந்தக் காணொளிக் காட்சி 'ரோமுக்கு முன் பாரிஸ்' என குறிப்பிடும் வாசகத்தைக் கொண்ட காட்சியையும் உள்ளடக்கியிருந்தது. இது இத்தாலிய தலைநகரான ரோமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது.