சட்டவிரோதமாக ஒரு தொகை அமரிக்க டொலர்களை மஸ்கட் நாட்டிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட ஓமான் நாட்டு பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 51 மற்றும் 57 வயதுடைய தேயிலை வியாபாரிகள் என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 1,11,73,400 ரூபா பெறுமதியான 69,400 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.