(எம்.சி.நஜிமுதீன்)

சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினர் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஸ்ரீவஜிராம ஷர்ம பெளத்த நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்ரத்தக உடன்படிக்கையானது ஆங்கில மொழியில் மாத்திரம் உள்ளது. அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. மேலும் மக்களின் கவனத்தை வேறு  திசைகளுக்குத் திருப்பிவிட்டு அவ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்களை மேற்கொள்கின்றது என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.