17 வருடங்களிற்கு முன்னர் காணாமல்போன கிராபிக் கலைஞரின் உடல் அவுஸ்திரேலியாவின்மெல்பேர்னில் குப்பைதொட்டியில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த  சில வாரங்களிற்கு முன்னர் குப்பைதொட்டியிலிருந்து மீட்கப்பட்ட உடல் கிராபிக் கலைஞர் ஜோன் கிறிஸ்டியானஸ் உடையது என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மெல்பேர்னில் உள்ள களஞ்சியசாலையொன்றை சுத்தம் செய்யும்போது பணியாளர்கள்  கிராபிக் கலைஞரின் உடலை மீட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் 2001 ம் ஆண்டு காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியானஸ் தனது குடும்பத்தவர்களிடமிருந்து பிரிந்திருந்த நிலையிலேயே காணாமல்போயிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் 17 வருடங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ள போதிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்தவர்கள் சிலர் இருக்ககூடும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவரது உடல் குப்பை தொட்டிக்குள் மீட்கப்பட்டுள்ளதால்   அவரிற்கு ஏதோ நடந்துள்ளது என்ற முடிவிற்கு வரமுடிகி;ன்றது என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிறிஸ்டியானோஸ் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.