அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா பழரசம் அருந்திய அறையின் அமைப்புகளும் காட்சிகளும் முரண்படுவதால் குறிப்பிட்ட வீடியோ உண்மையானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் பழரசம் அருந்துவது போன்ற வீடியோவொன்று அவரது மறைவிற்கு பின்னர் வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட வீடியோ குறித்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அந்த அறையின் அமைப்பும் காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா என்ற சந்தேகம் அவர்களிற்கு எழுந்துள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில் ஜெயலலிதா வீடியோ பார்த்துக்கொண்டே பழரசம் அருந்துவது போன்ற காட்சிகள் காணப்பட்டன.

எனினும் அந்த அறையின் அமைப்பின் படி பார்த்தால் ஜெயலலிதாவிற்கு எதிரே வாசல்தான் காணப்படுகின்றது தொலைக்காட்சி அங்கு காணப்படுவதற்கான வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அந்த அறையை அறுவை சிகிச்சை கூடமாக மாற்றிவிட்டதாக அப்பலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.