ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பரா மாகாணத்தில் இன்று சாலையில் மேற்கொள்ளப்பட்ட  குண்டுவெடித்ததில் பஸ்ஸில் பயணித்த 11 பேர் பலியாகியுள்ளதோடு. 30 பேர் படுகாயமடைந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான காபுல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃப்ரா மாகாணம், பலா பலுக் மாவட்டத்தின் வழியாக சென்ற போது தலிபான் தீவிரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

குறித்த தாக்குதலில் பஸ்ஸில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தடீதாடு. சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.