ஆற்று மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்!!!

Published By: Digital Desk 7

31 Jul, 2018 | 03:01 PM
image

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு வடக்கு விவசாயக் கண்டப் பகுதியில் ஆற்று மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாமடு விவசாயக் கண்ட விவசாயிகளின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

விவசாயச் செய்கையைப் பாதுகாப்பதற்காக காட்டு விலங்குகளுக்காக போடப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நாசம் செய்வதால் காட்டு யானைகள் வயல்களை துவம்சம் செய்வதாகவும் ,விவசாயிகளின் அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வயல்கள் வழியாக கொண்டு செல்வதால் எமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். 

"முந்தன்குமாரவெளி என்னுமிடத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதியைப் பெற்று பாலாமடு பகுதியில் இரவு பகலாக மணல் அகழப்படுகிறது, அகழ்படும் மணலை வயலுக்குள் குவித்து வைத்துள்ளார்கள் இதனை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் மணல் அகழ்பவர்களுக்குச் சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.

உழவு இயந்திரங்களை ஆற்றுக்கள் இறக்கி மணல் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலம் அந்த தடையை மீறி மணல் ஏற்றுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரதேசத்தில் மணல் அகழ்படுவதால் ஆற்றில் அகலம் அதிகரித்து பல ஏக்கர் வயற் காணிகளை இழந்துள்ளோம் எனவே இந்த பிரதேசத்தில் மணல் அகழ்வதை முற்றாக தடை செய்ய வேண்டும்." என விவசாயி ஒருவர் கவலையோடு கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47