உடுவே தம்மாலோக்க தேரருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தம்மாலோக்க தேரரின் சட்டத்தரணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை அவரை வெளிநாட்டில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெளத்த மத நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக உடுவே தம்மாலோக்க தேரர், மஸ்கட் நகர் ஊடாக லண்டன் நோக்கி செல்வதற்கு கடந்த 26 அம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்று ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அமர்ந்திந்தபோது, விமானத்திலிருந்து இறக்கப்பட்டு குடிரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்கவின் உத்தரவுக்கு அமைய திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.