வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக  வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொல்புரம், பிளவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிலேயே நேற்று காலை 9 மணியளவில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது.

3 குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற நிலையில். குடும்பத்தில் ஒருவர் சந்தைக்குச் சென்றுள்ளார். ஏனையோர்  வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் எவரும் இல்லாதவேளை பார்த்து அங்கு புகுந்த கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளது.

சந்தைச் சென்றவர் வீடு திரும்பிய போது வீடுடைத்து திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

உடனடியாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, தொல்புரம் பகுதியில் நேற்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியோரை அப்பகுதி இளைஞர்கள் துரத்தி சென்றதில் தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.