வாழ்க்கையின் முதல் மணித்தியாலத்தில் ஐந்தில் மூன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கப்படுவதில்லை புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பதற்கு பிறந்து முதல் மணித்தியாலத்தில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் முக்கியமானது 

அண்ணளவாக 78 மில்லியன் குழந்தைகள், அல்லது ஐந்தில் மூன்று குழந்தைகள் தமது வாழ்வின் முதல் மணித்தியலாத்தில் தாய்ப்பால் ஊட்டப்படுவதில்லை. இது அவர்களை இறப்பதற்கான மற்றும் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான அதிகளவு ஆபத்தில் தள்ளிவிடுகின்றது. அத்துடன், தாய்ப்பால் குடிப்பதனை தொடரும் அளவினையும் குறைக்கின்றது என தமது புதிய அறிக்கையில் யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன குறிப்பிட்டுள்ளன.

வாழ்வின் முதல் மணித்தியாலத்தில் தாய்ப்பால் அளிக்கப்படும் புதிதாக பிறந்த குழந்தைகள் வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது. பிறந்ததன் பின்னர் தாய்ப்பால் ஊட்டுவதனை சில மணித்தியாலங்கள் தாமதித்தால் வாழ்க்கையை அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும். மார்பில் இருந்து பாலை உறிஞ்சும் தோல்களுக்கு இடையிலான பிணைப்பு, அதிக போஷாக்கும், நோயெதிர்ப்புத் திறனும் கொண்ட குழந்தைகளுக்கான ‘முதல் தடுப்பூசி’ என கூறப்படும் கொலஸ்ரோம் உள்ளடங்கலாக தாய்ப்பால் உற்பத்தியை தாய்மாரில் தூண்டும்.

“தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலான நாடுகளில், அது வாழ்க்கைக்கும் அல்லது இறப்பிற்கும் சம்பந்தப்பட்டதாகும்” என யுனிசெப் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்ரீய்டா எச் போர் தெரிவித்தார். “இருப்பினும், ஒவ்வொரு வருடமும், மில்லியன் கணக்கான புதிதாக பிறந்த குழந்தைகள் உடனடி தாய்ப்பாலின் பயன்களை தவற விடுகின்றனர். அதற்கான காரணங்கள் எப்போதும் நாம் மாற்றக் கூடிய விடயங்களாகும். குழந்தை பிறந்தவுடன் அந்த மிக முக்கியமான நிமிடங்களில், வைத்திய நிலையங்களில் உள்ள வைத்தியர்களிடம் இருந்தும் கூட தாய்ப்பால் ஊட்டுவதற்கு போதியளவு ஆதரவினை தாய்மார் பெறுவதில்லை.” என அவர் குறிப்பிட்டார்.

குழந்தை பிறந்த முதல் மணித்தியாலத்தில் கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்காவில் தாய்ப்பால் ஊட்டல் வீதம் அதிகமாகவும் (65 %), கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக்கில் மிகக் குறைவாகவும் (32 %) உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது. புரூண்டி, இலங்கை மற்றும் வனாட்டு போன்ற நாடுகளில் பிறக்கும் 10 குழந்தைகளில் 9 குழந்தைகளுக்கு முதல் மணித்தியாலத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்படுகின்றன. அதற்கு மாறாக, அசர்பைஜான், சாட் மற்றும் மொன்டீனீக்ரோ ஆகிய நாடுகளில் பத்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே தாய்ப்பால் கிடைக்கின்றன”.

“தாய்ப்பால் ஊட்டல் என்பது குழந்தைகளிற்கு வாழ்க்கையில் சிறந்த ஆரம்பத்தைக் கொடுக்கின்றது” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. டெட்ரோஸ் அதானொம் கெப்ரிய்ஸஸ் தெரிவித்தார். “தாய்மாருக்கான ஆதரவினை நாம் உடனடியாக அதிகரிக்க வேண்டும். குடும்ப  உறுப்பினர்களோ, சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களோ, ஊழியர்களோ மற்றும் அரசாங்கமோ, எதுவாகவிருப்பினும், தமது குழந்கைளுக்குத் தேவையான ஆரம்பத்தை அவர்கள் வழங்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

76 நாடுகளில் உள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த Capture the Moment என்ற முன்னெடுப்பானது, தாய்ப்பாலூட்டலை ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டிய அவசியம் இருக்கின்ற நிலையில், பெரும்பாலான புதிதாக பிறந்த குழந்தைகள் பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு காரணங்களுக்காக காத்திருக்கச் செய்யப்படுவதாக கண்டறிந்தது:       

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உணவு அல்லது பானங்கள் வழங்கல், போர்மியுலா உள்ளடங்கலாக: கொலஸ்ரோமினை அகற்றல், குழந்தைக்கு முதியவர் ஒருவர் தேன் ஊட்டல் அல்லது சீனி தண்ணீர் அல்லது குழந்தைகளுக்கான விசேட திரவ மருந்து போன்ற மருந்தினை புதிதாக பிறந்த குழந்தைக்கு மருத்துவ பயிற்சியாளர்கள் வழங்கல், தமது தாயுடனான புதிதாக பிறந்த குழந்தையின் பிணைப்பினை தாமதித்தல் போன்ற பொதுவான பழக்கங்கள்.  

தேர்ந்தெடுப்புக்குரிய சி-பிரிவுகளின் அதிகரிப்பு: எகிப்தில், 2005 மற்றும் 2014 காலப்பகுதியில், 20 வீதத்தில் இருந்து 52 வீதமாக அதிகரித்து சிசேரியன் பிரிவு வீதங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில், தாய்ப்பால் ஊட்டலை ஆரம்பத்திலேயே தொடங்கல் வீதமானது 40 வீதத்தில் இருந்து 27 வீதமாக குறைந்தது. சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்ட புதிதாக பிறந்த குழந்தைகளின் மத்தியில் ஆரம்பத்திலேயே தொடங்கல் அளவு குறைவாக உள்ளமையை 51 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட கற்கை வெளிப்படுத்துகின்றது. எகிப்தில், சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்பட்ட குழந்தைகளில் 19 வீதமானவைக்கு மாத்திரமே முதல் மணித்தியாலத்தில் தாய்ப்பால் ஊட்டப்பட்டுள்ளது. இயற்கை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அளவு 39 வீதமாக பதிவாகியுள்ளது.

தாய்மார் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தில் இடைவெளிகள்: திறன்வாய்ந்த பிரசவம் பார்ப்பவரின் இருப்பு என்பது தாய்ப்பால் ஊட்டலை ஆரம்பத்திலேயே தொடங்குதல் வீதத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 2005 மற்றும் 2017 என்பவற்றுக்கு இடையில் 58 நாடுகளில், மருத்துவ நிலையங்களில் பிரசவத்தின் அளவு 18 வீதப் புள்ளிகளாக அதிகரித்தது. அதேவேளை, ஆரம்பத்திலேயே தொடங்கல் 6 வீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், பிறந்தவுடனேயே குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. வைத்தியப் பணியாளர்களின் உதவியும் வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. சேர்பியாவில், பிரசவத்தின் போது தாய்மாருக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் விளைவாக 2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 43 வீதப் புள்ளிகளாக இந்த அளவு அதிகரித்தது.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆரம்ப கற்கைகளில், குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலத்தில் தாய்ப்பால் ஊட்டலை ஆரம்பித்தவர்களுடன் ஒப்பிடும் போது, பிறப்பின் பின்னர் 2 மற்றும் 23 மணித்தியாலங்களுக்கு இடையில் தாய்ப்பால் ஊட்டலை ஆரம்பித்த புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 33 வீத ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன. பிறப்பின் பின்னர் ஒரு நாளில் அல்லது அதற்கும் அதிகமான காலத்தின் பின்னர் தாய்ப்பால் ஊட்டல் ஆரம்பிக்கப்பட்ட புதிதாக பிறந்த குழந்தைகளின் மத்தியில், இந்த ஆபத்து இரு மடங்காக இருந்தது.

குழந்தை உணவுகள் மற்றும் ஏனைய தாய்ப்பாலுக்கான மாற்று உணவுகளை தடுப்பதற்கான உறுதியான சட்ட ஏற்பாடுகளை உள்வாங்குவதற்கு அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஏனைய தீர்மானம் எடுப்பவர்களை இந்த அறிக்கை தூண்டுகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் என்பன இணைந்து முன்னெடுத்த உலகளாவிய தாய்ப்பால் ஊட்டல் கூட்டிணைவு, 2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாய்ப்பால் ஊட்டல் புள்ளிப்பட்டியலை வெளியிட்டது. தாய்ப்பால் ஊட்டல் கொள்கைகளினதும், நிகழ்ச்சிகளினதும் தேர்ச்சியை பின்தொடர்கின்றது. அதில், தமது குழந்தையின் வாழ்க்கையில் முதல் மணித்தியாலத்தில் அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் ஊட்டலை ஆரம்பிப்பதற்கும், தமக்கு விருப்பமான வகையில் தொடர்வதற்கும் உதவும் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கு நாடுகளை அவை ஊக்குவிக்கின்றன.   

உலக சுகாதார ஸ்தாபனத்தைப் பற்றி, 

உலக சுகாதார ஸ்தாபனமானது, ஐக்கிய நாடுகள் முறைமைக்குள் சர்வதேச சுகாதாரத்தினை வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கின்றது. தமது 194 உறுப்பு நாடுகளுடன் பணியாற்றி, சுகாதாரத்தை முன்னிறுத்துவது, உலகை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மற்றும் நலிந்தவர்களுக்கு சேவையாற்றுவது என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிநோக்கமாகும். உலக சுகாதார ஸ்தாபனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விஜயம் செய்யுங்கள் http://www.who.int/. தாய்ப்பால் ஊட்டல் பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியைப் பற்றி இங்கு கற்றுக் கொள்ளவும். உலக சுகாதார ஸ்தாபனத்தை Twitter மற்றும் Facebook என்பவற்றில் பின்தொடருங்கள்.

யுனிசெப் பற்றி,

உலகின் மிகவும் துரதிஷ்டவசமான சிறுவர்களை எட்டுவதற்கு உலகின் மிகவும் சிரமமான பகுதிகளில் யுனிசெப் பணியாற்றுகின்றது. 190 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், அனைவருக்கும் சிறந்த உலகு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு சிறுவருக்கும், எல்லா இடங்களிலும் நாம் பணியாற்றுகின்றோம். யுனிசெப் மற்றும் சிறுவர்களுக்கான அதன் பணி பற்றிய மேலதிக தகவல்களுக்கு விஜயம் செய்யுங்கள் http://www.unicef.org/. Every Child ALIVE என்ற பிரசாரம் குறித்தும் அல்லது தாய்ப்பால் ஊட்டல் பற்றிய யுனிசெப்பின் பணி குறித்தும் அறிந்து கொள்ளுங்கள். யுனிசெப்பினை Twitter மற்றும்  Facebook என்பவற்றில் பின்தொடருங்கள்.