மொஸ்கோ பகி­ரங்க டென்னிஸ் தொடரில் இளம் வய­தி­லேயே சம்­பியன் பட்டம் வென்று செர்­பிய வீராங்­கனை சாதனை படைத்­துள்ளார்.

பெண்­க­ளுக்­கான டென்னிஸ் சம்­மே­ள­னத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட டென்னிஸ் தொட­ரான மொஸ்கோ பகி­ரங்க தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடை­பெற்­றது. 

இதில் ரஷ்­யாவின் அனாஸ்­டா­சியா போட்­டோ­போவா மற்றும் செர்­பி­யாவின் டேனி­லோவிச் ஆகியோர் பலப்­ப­ரீட்சை நடத்­தி­னார்கள்.

இரு­வரும் 17 வயதே நிரம்­பிய இளம் வீராங்­க­னை­கள்தான். இதில் 7-–5, 6-–7 (1–7), 6–-4 என டேனி­லோவிச் வெற்றி பெற்று சம்­பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்­றியின் மூலம் தொடரை வென்­ற 2000-ஆம் ஆண்­டுக்குப் பின்னர் பிறந்த வீராங்­கனை (17 வயது 7 மாதம்) என்ற சாத­னையைப் படைத்­துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு குரோ­ஷி­யாவைச் சேர்ந்த அனா கோன்ஜுஹ் நாட்­டிங்காம் பகி­ரங்­கத்தை வென்று இளம் வயதில் சாதனை படைத்­திருந்தார். அதன்பின் தற்­போது டேனி­லோவிச் சாதித்­துள்ளார்.

கடந்த 2005- ஆம் ஆண்டு ஜப்பான் பகி­ரங்க டென்னிஸ் தொடரில் 18 வய­துக்குட்­பட்ட வீராங்­க­னைகள் இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யி­ருந்­தனர்.