மொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா? - ஹரீன்

Published By: Vishnu

31 Jul, 2018 | 07:46 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

மொட்டு சின்னத்தின் வேட்பாளரின் கதையானது மூன்று வேதாளங்களின் நிலைமை  போன்றதாகும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக்ஷவை தவிர வேறு உலகமே இல்லையா?.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா?. இது கட்சியா? என்பதனை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது இதயங்களை தட்டிக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

2020 ஆம் ஆண்டு கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊடாக வர­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் நிலைமை மூன்று வேதா­ளங்­களின் கதையைப் போன்­றது. வேதா­ளத்தின் உள்ளே இருப்­ப­தனை நாம் அறிவோம். அதனை நினைக்கும் போது எனக்கு வெட்­க­மாக உள்­ளது. எமது நாட்டில் அர­சியல் மூடப்­பட்ட அறையை போன்­ற­தாகும். மொட்­டுவில் உள்­ள­வர்கள் தமது இத­யங்­களை தட்­டி­ப்பார்க்க வேண்டும். கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு ராஜ­ப­க்ஷவை தவிர வேறு உல­கமே இல்­லையா?. இனிமேல் வாழ்க்­கையில் ஒரு­போதும் அவர்கள் வர­மாட்­டார்கள்.

ஒரு சிலர் பஷில் ராஜ­பக்ஷ வரப்­போ­வ­தாக கூறு­கின்­றனர். இன்னும் ஒரு சிலர் சமல் ராஜ­பக் ஷ என்று சொல்­கின்­றனர். அத்­துடன் ஒரு சிலர் கோத்­தபாய ராஜ­பக்ஷ வரு­வதா­கவும் கூறு­கின்­றனர். அதனால் 3 வேதா­ளங்­களை   எடுத்­துக்­காட்­டினேன். மூன்று வேதா­ளங்கள் உள்­ளன. ஆனால் உள்ளே பெரிய வேதாளம் ஒன்று உள்­ளது. அந்த வேதாளம் மறைந்­தி­ருந்து அனைத்­தையும் கவ­னித்த வண்ணம் உள்­ளது. அது யார் என்று நான் கூற வேண்­டி­ய­தில்லை.   எனினும் வேதாளம் நான்­காக மாறுமோ தெரி­யாது. ஏனெனில் ஒருவேளை சிரந்தி ராஜ­ப­க்ஷவும் வரு­வ­தற்கு வாய்ப்பும் உள்­ளது. யார் வரு­வார்­களோ தெரி­ய­வில்லை. ஆனால் உண்­மை­யாக கூறு­வ­தாயின் வேதா­ள­மாக 5 வரு­டங்­களில் நாமல் ராஜ­ப­க்ஷவே வருவார்.  ஆகவே அனை­வரும் ராஜ­ப­க் ஷ­வி­ன­ரே­யாவர்.  மொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா?.வேறு தலை­வர்­க­ளுக்கு வரு­வ­தற்கு இட­மில்­லையா?.இது கட்­சியா? அல்­லது வேறு ஏதா­வதா? என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58