மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார்.

குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால்  பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியுள்ளனர்.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை கையில் பிடித்தபடி அந்த வீதியில் வலம்வந்த நிலையில் பொலிஸார், மறைந்திருந்து அந்த பெண்ணை கைது செய்தனர். 

கைதுசெய்த பெண்ணுடன் அவரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார், அவரது வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக தீயை அணைத்துவிட்டு உள்ளே சோதனை செய்தபோது தலையில்லாத அந்த குழந்தையின் உடலை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். 

எதற்காக இந்த கொலையை செய்தார் குறித்த பெண் செய்தார் என்பது குறித்து பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.