இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சசிகலா என்பவருடன் திருமணமாகியது.

இவர்களுக்கு வீரபத்ரன் என்ற 7 வயது மகனும், விஜயா என்ற 4வயது மகளும் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சசிகலா உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தனது மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீளாத ராஜகோபால் இன்று தன் தோட்டம் அருகே உள்ள வேப்பம் மரத்தில் தனது இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் எருமப்பட்டி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 3 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தனது இரு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.