(கலைச்செல்வன்)

அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் இத்தாலியில் காணாமல் போன பிரான்ஸ் பனிச்சறுக்கு வீரரின் உடல் எச்சங்கள் சுமார் 60 ஆண்டுகளின் பின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இத்தாலி பொலிஸ் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு கதை மூலம் அவரை பற்றிய தகவல்கள் தெரிய வந்திருப்பதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தகவல்களுக்கமைய மனித எச்சம், கண்ணாடி மற்றும் பனிச் சறுக்கு உபகரணங்கள் போன்றவற்றை இத்தாலியின் ஆஸ்தோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கின் உயரமான பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. 

இது குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் பகிர்ந்து இருந்தனர். இதன் மூலமாக அவர்கள் காணாமல் போனவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சமூகவலைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடும்பமொன்று இது எங்களது உறவினர் ஹென்றி லி மாஸ்னியின் கண்ணாடியுடன் பொருந்துகிறது என்ற தகவலின் படி தொடர்ந்து தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சம், கண்ணாடி மற்றும் பிற உபகரணங்கள் ஆல்ப்ஸ் மலையில் சுவிஸ் எல்லை அருகே 10 ஆயிரம் அடி உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையில் இருந்து கண்டுக்கப்பட்ட துணிகளை வைத்து காணாமல்போனவரின் உயரம்  அவரது, வயது 30 ஆக  இருக்கலாம் என்று கணித்துள்ளனர். 

அதேபோன்று, அவரது மரணம் வசந்த காலத்தில் நேர்ந்திருக்கலாமென தடயவியல் துறையை சேர்ந்த மாரினெல்லா தெரிவிக்கின்றார்.

இவ்வாண்டு  ஜூன் மாதம் ஆஸ்தோ பள்ளதாக்கு பொலிஸார் இந்த தகவல்களை சமூக உடகங்களில் பகிர்ந்து இதனை பிரான்ஸ் மற்றும் சுவிற்ஸர்லாந்து நாடுகளில் அதிகம் பகிரும்படி வேண்டுகோளையும் விடுத்திருந்தனர்.

இச் செய்தியை அறிந்த எம்மா நாசீம் இது தங்கள் உறவினராக இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பினார்.

சுவிஸ் எல்லையில் உள்ள மேட்டர் ஹார்ன் பகுதியில் 1954 ஆம் ஆண்டு பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தங்கள் உறவினர் ஹென்றி காணாமல் போய்விட்டதாகவும், இப்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அவரது அடையாளத்தோடு ஒத்துபோவதாகவும் தெரிவித்தார் எம்மா நாசீம்.

ஒருவர் கண்ணாடி அணிந்து இருப்பதுபோல அந்த குடும்பம் அளித்த புகைப்படமானது தங்களிடம் உள்ள கண்ணாடியுடன் ஒத்துப்போகிறது. 

இது குறித்த டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகு குறித்த தகவல்கள் தெரிய வரும்மென பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.