(விதுஷா றௌஜனா )

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுணுப்பிட்டி பகுதயில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துளளனர்.

சம்பவத்தில் உயரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் ஆவார்.

கிரிபத்கொடை, டிங்கியாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த அவர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்த கிரிபத்கொடை பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.