(விதுஷா றௌஜனா )

யாழ்ப்பாணம் - நுவரெலியா பிரதான வீதியின் புனாவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மதாவச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  வெங்காயம் ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் அவரின் உதவியாளரும் மாதவாச்சி பிரதான வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.