ஸ்ரீரெட்டி விவகாரத்தை அம்பலப்படுத்திய லோரன்ஸ்

Published By: Vishnu

30 Jul, 2018 | 12:49 PM
image

என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீரெட்டி விவகாரமானது ஒரு பெரிய விடயம் அல்ல. ஆகையால் அதைப் பற்றி நான் கவலையடையப் போவதில்லை என நடிகர் ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரையுலகில் பலரும் வாய்ப்பு தருவதாக சொல்லி, எம்மை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். 

இது தொடர்பாக அவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இயக்குனரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், இயக்குநனம் நடிகருமான சுந்தர் சி, நடிகரான ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எம்மைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விடயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் எம்மிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். 

நான் தெலுங்கில் ‘ரெபெல்’ என்ற படத்தை இயக்கும் சமயத்தில், ஒரு ஹொட்டேலில் எம்மை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு ஆண்டுகள் எம்மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்?  நான் தங்கியிருந்த ஹொட்டேல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்குவைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். 

மேலும் அந்த ஹொட்டேல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஹொட்டேல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எமக்கும், ஆண்டவனுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  

இதற்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சினை தான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும்.

உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் எம்மை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எமக்கு பயமில்லை. எமது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேலாளரைத் தொடர்பு கொண்டு, உங்களது சட்டத்தரணிகள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். 

நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன். உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் ராகவா லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35