இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்

21 Nov, 2015 | 12:18 PM
image

 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுகிறது. போட்­டியை நடத்த சென்னை, மும்பை, கொல்­கத்தா, பெங்­களூர், மொஹாலி, டெல்லி, தர்­ம­சாலா, நாக்பூர் ஆகிய 8 நக­ரங்கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன. 

போட்­டிக்­கான ஏற்­பா­டுகள் குறித்து இந்­திய கிரிக்கெட் சபையின் ஆலோ­சனை கூட்டம் மும்­பையில் நேற்று நடந்­தது. பின்னர் இந்­திய கிரிக்கெட் சபை செய­லாளர் அனுராக் தாகூர் நிரு­பர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:-


உலக கிண்ண ஏற்­பா­டுகள் குறித்து ஆலோ­சனை மேற்­கொண்டோம். போட்­டிக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ள ஒரு சில மைதா­னங்கள், தங்­க­ளது தயார்­நி­லைமை குறித்து இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்­பான சான்­றி­தழ்கள் வர­வில்லை.


சென்­னையில் போட்­டியை நடத்­து­வதில் சில பிரச்­சி­னைகள் இருந்­தது உண்மை தான்.

இதனால் இந்த விஷ­யங்­களை தொடர்ந்து நிலு­வையில் வைத்­தி­ருந்தோம். இருப்­பினும் உலக கிண்ணப் போட்­டியை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பை சென்னை இழந்து விட­வில்லை. சென்­னையை பொறுத்­த­வரை அங்கு எந்­தெந்த ஆட்­டங்­களை நடத்­து­வது என்­பது மட்­டுமே பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. இலங்கை அணி வீரர்கள் அங்கு விளை­யாட முடி­யாது.

மேலும் மூன்று கெல­ரிகள் பயன்­ப­டுத்த முடி­யாத நிலைமை இருக்­கி­றது. அதே நேரத்தில் தொடர்ந்து அந்த கெல­ரி­களை பயன்­ப­டுத்­தாமல் ரசி­கர்­களை ஏமாற்­றவும் முடி­யாது.
இவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right