தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டுமெனவும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்போது 94 வயது. வயோதிபம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் கருணாநிதி.

வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 27 ஆம் திகதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவத் தொடங்க, காவேரி வைத்தியசாலையின் அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். 

நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினார். 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக  கனிமொழி தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.