ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

மடு தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தாரையும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் மடு தேவாலயத்தின் நிர்வாகி அருட் தந்தை எமிலியானு பிள்ளை ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் கொழும்பு பேராயர் காடினால் மெல்கம் ரஞ்சித் ஆண்கை உள்ளிட்ட அருட் தந்தைகள் சமயக் கிரியைகளை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கியதுடன் விசேட நினைவுச் சின்னமொன்றும் ஜனாதிபதிக்கு வாழங்கப்பட்டது.

சமயக் கிரியைகளைத் தொடர்ந்து தேவாலயத்தை சுற்றிப் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்தி பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன் தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.