(இரோஷா வேலு)

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் மாதிவெலயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முறையற்ற வகையில் அத்துமீறி நுழைய முயற்சித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்குமிட கட்டடத்தொகுதியில் முறையற்ற வகையில் உள் நுழைய முற்பட்ட இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனின் சாரதியையே (வயது 41) இவ்வாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹாண விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில், சாரதியின் முறையற்ற நுழைதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.