சுமார் 458 இலட்சம் ரூபா செலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்துள்ளார்.

இந் நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகளான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர மேயர் ரம்ழான் அப்துல் வாஸித், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் இன்றைய தினம் முன்வைத்தனர்.

எனினும் இந்த கோரிக்கைகள் எதற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்காமல், கடந்த பல தசாப்த காலமாக யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வங்கிகள் மூலமாக உதவிகள் வழங்கப்படுகின்றன என்பதை மாத்திரம் தெரிவித்தார்.