பெருந்­தோட்­டத்­துறை மக்­களும் அர­சாங்­கத்­துக்கு வரி செலுத்­து­கின்­றார்கள், தேர்­தலில் வாக்­க­ளிக்­கின்­றார்கள் நாட்டின் ஏனைய பிர­ஜை­க­ளைப்­போ­லதான் அவர்­களும் உள்­ளனர். ஆனால் அர­சாங்கம் ஏனைய பகு­தி­களில் வழங்கும் சேவைகள் மற்றும் வச­தி­களை பெருந்­தோட்­டத்­து­றைக்கு வழங்­கு­வதில் பரா­முகம் காட்­டி­வ­ரு­வதைக் காண­மு­டி­கின்­றது. அந்­த­வ­கையில் அவர்­க­ளுக்­கான சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, கல்வி உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களும் முறை­யாக சென்­ற­டை­ய­வில்லை . 

இன்றும் பெருந்­தோட்­டத்­து­றையின் 25 சத­வீத மக்­க­ளுக்கு முறை­யான சுகா­தா­ர­வ­ச­திகள் இன்றி வாழ்ந்து வரு­வ­தாக சுகா­தார மதிப்­பீ­டுகள்  தெரி­விக்­கின்­றன.

இவ்­வாறு, பெருந்­தோட்ட சுகா­தா­ர­கட்­ட­மைப்பை அர­சாங்­கத்தின் தேசிய சுகா­தா­ரத்­து­றையில் ஒன்­றி­ணைக்கும் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­வது தொடர்பில் கொழும்பு மன்­றக்­கல்­லூ­ரி கலந்­து­ரை­யா­டலின் முடிவில் தெரி­விக்­கப்­பட்­டது.

பிரான்ஸ் அபி­வி­ருத்தி முகவர் நிலைய அனு­ச­ர­ணை­யுடன் உலகின் மருத்­து­வர்கள் அமைப்பும் கண்டி மனி­த­வள அபி­வி­ருத்தி ஸ்தாப­னமும் இணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் செய­ல­மர்வில் கலந்­து­கொண்ட பிரான்ஸ் வைத்­தியர் நோரி ஓமா­மலின், மனி­த­வள அபி­வி­ருத்தி ஸ்தாப­னத்தின் தலைவர் பி.பி.சிவப்­பி­ர­காசம் மற்றும் உலக வைத்­திய அமைப்பின் இலங்­கையின் சிரேஷ்ட செயற்­றிட்ட ஆலோ­சனை முகா­மை­யாளர் நிலுஷா பட்­ட­பெந்தி ஆகியோர் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு, 

இலங்­கை­யில் வறு­மைக்­கோட்­டின் கீழ் பெருந்­தோட்­டத்­துறை வாழ் மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். ஏனைய துறை­க­ளுடன் ஒப்­பிட்­டுப்­பார்க்­கையில் 11 சத­வீ­தத்­தினர் வறு­மைக்­கோட்­டுக்கு கீழேயே வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர். அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் இந்த சனத்­தொ­கையில் 50சத­வீ­தத்­துக்கு மேற்­பட்­டோரின் மாதாந்த வரு­மானம் வெறும் 5ஆயிரம் ரூபா­வென்றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 

தற்­போது பெருந்­தோட்­டங்­களில் 25சத­வீ­த­மா­ன­வர்­க­ளுக்கு எந்­த­வி­தத்­திலும் சுகா­தார வச­திகள் வழங்­கப்­ப­ட­வில்லை. 5வய­துக்­குட்­பட்ட 35.9 சதவீத­மான சிறு­வர்கள் போஷாக்­கின்­மையால் தவிக்­கின்­றனர். இன்றும் 67.8 சதவீத­மானோர் தனி­அறை அல்­லது லயன் அறை­க­ளி­லேயே வசித்து வரு­கின்­றனர். மேலும், 2.2சத­வீ­த­மான குழந்­தைகள் லயன் அறை­க­ளி­லேயே பிறக்­கின்­றனர். அத்­துடன் இங்கு 10.9 சத வீத வறுமை நிலை நில­வு­கின்­றது. இதை நாம் வளர்ச்­சி­ய­டைந்த நகர்ப்­பு­ற­மொன்­றுடன் ஒப்­பிட்­டுப்­பார்க்­கையில் நக­ரத்தில் வறுமை வீதம் 2.2சத­வீ­த­மா­கவும் கிரா­மப்­பு­றத்தில் 7.6 சத­வீ­த­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது. வீடு­களில் குழந்­தைகள் பிறக்கும் வீதம் பெருந்­தோட்­டத்தில் 2.2 சத­வீ­த­மாக இருக்கும் நிலையில் அது கிரா­மப்­பு­றத்­திலும் நக­ரத்­திலும் பூஜ்­ஜி­ய­மா­கவே இருக்­கின்­றது.

இதே­வேளை, 2017 ஆம் ஆண்டு உலக வங்­கியின் ஆய்­வின்­படி பெருந்­தோட்­டத்­து­றையில் ஐந்து வய­துக்கும் குறை­வான சிறு­வர்­களில் 21.1 சத­வீ­த­மா­னோரும் கர்ப்­பி­ணித்­தாய்­மாரில் பெரும்­பா­லானோரும் நிறை­கு­றைவால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் ஐந்து வய­துக்கும் குறை­வான சிறு­வர்­களில் 38.4 சத­வீ­த­மா­னோரும் பெரும்­பா­லான கர்ப்­பி­ணித்­தாய்மாரும் போஷாக்­கின்­மைக்குட்பட்டுள்ள­தாக குறித்த ஆய்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 2012 ஆம் ஆண்டின் கணக்­கெ­டுப்­பின்­படி சுமார் 901,647 பேர் பெருந்­தோட்­டத்­து­றையில் வாழ்­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.  

நோய்­த்த­டுப்பு, சுகா­தார சேவைகள் மாகாண சுகா­தார அதி­கா­ரத்தின் கீழ் இருப்­பினும் சுகப்­ப­டுத்தல் சேவைகள் முழு­மை­யாக தேசிய மய­மாக்கும் திட்டம் 1996 ஆம் ஆண்­டி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் இது­வ­ரையில் பெருந்­தோட்­டத்தில் 40 வைத்­தி­ய­சா­லை­களே அர­சாங்­கத்­தில் இணைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் பெருந்­தோட்­டத்­து­றையில் மொத்தம் 400 வைத்­தி­ய­சா­லைகள் இருக்­கின்­றன. இவை பல்­வேறு கார­ணங்­க­ளினால் அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்­வதில் தேக்­க­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் பெருந்­தோட்­டத்­து­றையில் ஆங்­கி­லேய காலத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட அப்­போ­தி­கரிஸ் மற்றும் டிஸ்­பென்­சரிஸ் முறை­மை­களே இன்றும் பேணப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது அர­சாங்­கத்தின் கீழ் அல்­லாது தனி­யான நிர்­வா­கக்­கட்­ட­மைப்பின் கீழேயே சுகா­தா­ரத்­துறை இயங்கி வந்­துள்­ளது. 

தோட்ட வைத்­திய உத­வி­யாளர் (Estate Medical Assistant),  தோட்ட மருந்து கலக்­கு­பவர் மற்றும் குடும்­ப­நல சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­களின் கைக­ளி­லேயே தற்­போ­து பெருந்­தோட்­டத்­து­றை­யி­ன் சுகா­தா­ரத்­துறை கட்­ட­மைப்­பா­னது தங்­கி­யுள்­ளது. இதுவே நக­ரிலோ அல்­லது கிரா­மங்­க­ளிலோ நாம் எடுத்­துக்­கொண்டால் அங்கு தகு­தி­வாய்ந்த வைத்­தி­யர்­களும் தாதி­மார்­களும் இருக்­கின்­றார்கள். அங்கு வேறு ஒருவர் மருத்­துவம் செய்ய முடி­யாது. இந்­த­மா­தி­ரி­யான வேறு­பா­டுகள் பெருந்­தோட்­டத்­து­றையில் காணப்­ப­டு­கின்­றன. தோட்ட வைத்­திய உத­வி­யா­ளர்­களின் செயற்­பா­டு­களை நாம் மதிக்­கின்றோம். எனினும், மேற்­கூ­றப்­பட்ட வேறு­பா­டு­களை நாம் களை­ய­வேண்டும்.

இது­த­விர நாட்டில் பிர­தேச சபை­யினால் வழங்­கப்­படும் "திரி­போசா" திட்டம் பெருந்­தோட்­டத்தில் நிர்­வா­கத்­தி­னா­லேயே வழங்­கப்­ப­டு­கின்­றது. இங்கு ஒரே நாடு ஒரே கட்­ட­மைப்பு எனினும், இந்த வித்­தி­யா­ச­மான அணு­கு­முறை ஏன்? பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு சம உரிமை இல்­லையா? போன்ற கேள்­விகள் எழு­கின்­றன. 

பெருந்­தோட்­டத்­து­றையில் சுகா­தா­ரத்­துறை மாத்­தி­ர­மல்ல போக்­கு­வ­ரத்து, மொழி, கல்வி போன்ற நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளிலும் பின்னடைவே­காணப்­ப­டு­கின்­றது. வர­லாற்று ரீதி­யாகவே­இந்த பின்­னடைவு தொடர்ந்­து­கொண்டே வரு­கின்­றது. 

இங்­குள்ள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சி­யல்­வா­திகள், தொழிற்­சங்­கங்கள் மற்றும் சிவில் சமூ­கங்கள் என அனை­வரும் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றார்கள். தொழிற்­சங்கங்கள் சகா­தா­ரத்­துறை தொடர்பில் அதி­க­ளவு கவனம் செலுத்­தாமை குறித்து பொது­வாக கூறப்­ப­டு­கின்­றது. தொழிற்­சங்­கங்களின் பிர­தான நோக்கம் சம்­பளம் மற்றும் அது தொடர்­பி­லான விட­யங்­க­ளி­லேயே அதி­க­ளவு கவனம் செலுத்­து­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. எனினும், கூட்டு ஒப்­பந்தம் என்­பது வெறு­மனே சம்­பள விட­யங்­களில் மாத்­திரம் கவனம் செலுத்­து­வதை விடுத்து சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து மற்றும் அவர்­க­ளு­டைய அடிப்­படை வச­திகள் தொடர்­பிலும் கவனம் செலுத்த வேண்­டு­மென்­பதே எமது கருத்­தாகும். அத்­தோடு அர­சாங்கம், பெருந்­தோட்ட அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புகள் மக்­களின் அடிப்­படை வச­திகள் தொடர்­பிலும் பங்­க­ளிப்பு செலுத்­த­ வேண்டும்.  

நாம் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரமுகர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலில் அவர்கள் "நாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். நாம் அரசாங்கத்தை முழுமையாக நம்புகின்றோம். விசேடமாக, இதில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன கவனம் செலுத்தி வருகின்றார்" என்றனர்.

இந்தப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

(இ.சதீஸ்)