கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் இரவு இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன், சிறுமி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றைய சிறுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தாய் மற்றும் தந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளை, வைத்­தி­ய­சா­லையில் இருந்து யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றப்பட்ட போதும் குறித்த சிறுமி இன்றைய தினம் உயி­ரி­ழந்­து­ விட்­டார் என அறி­விக்­கப்­பட்­டது. மேலும், சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கண்டி – யாழ் பிரதான வீதியில் விபத்து : 4 வயது சிறுமி பலி!!!