கடத்திய  ஆமைகளை திருப்பி அனுப்பிய இந்திய அரசு

Published By: Daya

28 Jul, 2018 | 04:16 PM
image

இலங்கையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு  சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட நட்சத்திர ஆமைகள் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானத்தை பரிசோதனை செய்த போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பெட்டி கிடந்தது.

பெட்டியை உரிமைகோரி யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 22 கிலோ நட்சத்திர ஆமைகள் இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

பின்பு விசாரணை நடத்தியதில் அந்தப் பெட்டியை யார் வைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. 

இதனைத் தொடர்ந்து அந்த ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது வனத்துறையினர்  குறித்த ஆமைகளை பரிசோதனை செய்தபோது அந்த ஆமைகளின் மீது வைரஸ் கிருமி இருப்பதை கண்டறிந்தனர். 

இதனை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வைத்து மீண்டும் இலங்கைக்கு இன்று காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமைகள் மருந்துக்காக கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05