சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர்.  

சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

எட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் வர முன்னர் கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.