யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறைப் பகுதியில் இருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்புத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.