வவுனியா நகரப்பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள  நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டால் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள் தமது வியாபாரத்தினைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நகரசபை ஊழியர்கள் வந்து நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை தடை செய்துள்ளதுடன் எமது பொருட்களையும் கையகப்படுத்தியிருந்ததுடன் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவகாசம் தந்துள்ளார்கள் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஆனால் நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

 இவ்வாறு நகரசபையினர் பள்ளிவாசலுக்கு முன்பாக வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு சட்டமும் இலுப்பையடியில் வியாபாரம் மேற்கொள்ளும் எமக்கு ஒரு சட்டத்ததையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

எதிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அகற்றும் பட்சத்தில் அல்லது அவ்விடத்தில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யும் பட்சத்தில் நாங்களும் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.