முள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர்

Published By: Digital Desk 4

28 Jul, 2018 | 02:14 PM
image

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடத்தின் பின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று காலை 10 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்தார்.

முள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி  காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று இன்று வரை 10 தினங்களை கடந்துன்னது.

 இந்த நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகின்ற நிலையில் அரச திணைக்கள அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நேரடியாக சென்று மக்களை பார்வையிட்டதோடு முதற்கட்டமாக தற்காலிக கூடாரங்களை அமைக்க தேவையான ஒரு தொகுதி தரப்பால்கள் வழங்கி வைத்துள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தெரிவித்தார்.

மேலும் அங்குள்ள கடற்படை அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அங்குள்ள நண்ணீர் கிணற்றில் இருந்து குடி நீரை வினியோகிக்க கடற்படை முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மாவட்ட அரசாங்க அதிபரின் திடீர் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்த முள்ளிக்குளம் கிராம மக்கள் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன் வைத்தனர்.

இந்த நிலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11