மட்டு. மாவட்ட ஏறாவூர், செலங்கலடி பகுதியில் முன் அறிவித்தல் இன்றி அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடை காரணமாக அப் பிரதேச வாழ் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மின்சாரத்  தடை தொடர்பாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர்கள் சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் அதற்கு அதிகாரிகள், வழமையான திருத்த வேலைகள் அல்லது மின் அழுத்தங்கள் கூடிக்குறையும் போது ஏற்படும் நிகழ்வுகள் என பதிலளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பிரதி வியாழக்கிழமை தோறும் மின் விநியோக விஸ்தரிப்பு வேலைக்காக மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது.

அதற்கும் மேலதிகமாக தற்போது தினமும் திடீர் மின் விநியோகம் தடைப்படத்தப்படுவதால் அதிக அசௌகரியங்களை மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருவதனால் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.