தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான டேல் ஸ்டெய்ன் உலகக் கிண்ணத் தொட­ருடன் ஒருநாள் போட்­டி­களி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

தென்­னா­பி­ரிக்க அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் காயத்தால் அவ­திப்­பட்ட பின்னர் அதி­லி­ருந்து மீண்டு வந்­துள்ளார். இலங்­கைக்கு எதி­ரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளை­யா­டினார். ஆனால் முன்புபோன்று  அவரால் சோபிக்க முடி­ய­வில்லை.

இந் நிலையில்  எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொட­ருக்குப் பிறகு ஒருநாள் போட்­டி­யி­லி­ருந்து ஓய்வு பெறப் போவ­தாகக் கூறி­யுள்ளார். இது­ கு­றித்து ஸ்டெய்ன் தெரிவிக்­கையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கிண்ணப் போட்­டியில் விளை­யாட முயற்­சிப்பேன். உலகக் கிண்­ணத்­துக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார்.