வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று  மதியம் கிணற்றில் தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாயும் மகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக  மகள் சென்றிருந்த சமயத்தில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த தாய் மகளை காப்பாற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரும் கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.

இருவரின் குரல் கேட்டு அயலவர்கள் உடனடியாக கிணற்றினுள் காயங்களுடன் காணப்பட்ட இருவரையும் மீட்டெடுத்து சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இருவரின் உடல் நிலமை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.