தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராக உள்ளதாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அபாய கட்டத்தை தொட்டதால் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சென்றுள்ளனர். உண்மை நிலை குறித்து தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி தொண்டர்களும் கலைஞரின் வீட்டிற்கு முன் திரண்டனர்.

இந்நிலையில் காவேரி வைத்தியசாலையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இரத்த அழுத்தத்தில் சமசீரின்மை யால் சிகிச்சைப் பெறுவதற்காக  மீண்டும் காவேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு வைத்திய நிபுணர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். 

இந்நிலையில் அதிகாலை 2 .30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.‘கலைஞரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.  நலமாக  அவருடைய இரத்த அழுத்தம் சீராகிவிட்டது.’ என்றார்.

இது குறித்து வைத்தியசாலையின் வெளியிட்ட அறிக்கையில், ‘ கலைஞரின் இரத்த அழுத்தம் சீராகிவிட்டது. அவர் அபாய கட்டத்தை கடந்துவிட்டார். வைத்தியர்கள்  தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.‘ என்று குறிப்பிட்டனர்.

இருப்பினும் தொண்டர்கள் காவேரி வைத்தியசாலை, கலைஞரின் கோபாலபுரம் வீடு , அறிவாலயம் ஆகிய இடங்களில் திரண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.